புதியவை

Saturday, April 29, 2017

நெஞ்சுக்குள்ளே உன்னை

கானல் நீராய்
கனவானது கலைந்திட 
உன்னோடு சேர்த்து
தொலைத்து விட்டேன்- என்
புன்னகையை
நித்தம் உன் நினைவு
சித்தத்தில் வந்திட
பார்க்கும் இடமெல்லாம் – நீயென
பைத்தியமாகிறேன்
எனை மறந்து
உ்னை நினைத்து
உருக்குலைந்து
பித்தனாய் நான் மாற
ஊர் தூற்றி
உற்றார் வெறுத்து
உறைவிடம் என்
தெரு வீதியினில்
பருவம் எனை படுத்த
போர்வையாய் உன் நினைவுகள்
துயிலாமல் துவழ்கிறேன்
வண்ணங்கள் என்கைமீதிருக்க
வண்ணத்துப்பூச்சியை
நான் எங்கே தேடுவேன்
ஒருதலை ராகம்
நெஞ்சினில் சோகம்
நீயோ பாவம் – இது
யார்விட்ட சாபம்