புதியவை

Saturday, April 29, 2017

தன்னம்பிக்கை

தனக்கிருக்கும்..... 
உறுதியான சக்தி ...... 
தன்னம்பிக்கை..............! 

தன்மானம் காத்திட ..... 
தலைசாயாத சக்தி .... 
தன்னம்பிக்கை.............! 

எல்லாமே இழந்தாலும் .... 
எஞ்சியிருக்கும் சக்தி .... 
தன்னம்பிக்கை...............! 

உயிரே போனாலும் ............. 
உயிர்த்தெழும் சக்தி ........... 
தன்னம்பிக்கை...........! 

இரக்க பார்வையை ...... 
இல்லாதொழிக்கும் சக்தி ..... 
தன்னம்பிக்கை............! 

எல்லாம் சாத்தியமே என்று ...... 
அறிவை நம்பும் சக்தி ........ 
தன்னம்பிக்கை.............!