புதியவை

Wednesday, May 31, 2017

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவேண்டியவை

எம்மில் பலரும் தற்போது 30 வயதைக் கடந்துவிட்டால் எதைப் பற்றி பேசுகிறார்களோ இல்லையோ அவர்களின் சர்க்கரையின் அளவைப் பற்றியோ அல்லது சர்க்கரை நோய் பரிசோதனைப் பற்றியோ பேசாமல் இருப்பதில்லை. அந்தளவிற்கு எம்மவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 
அதே சமயத்தில் இவர்கள் தற்போது சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு பெறுகிறேன் என்ற போர்வையில் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆரோக்கிய குறிப்புகளைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். ஆனால் எதனையும் உறுதியாக பின்பற்றுவதில்லை. ஆனால் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பது அனைத்து வகை மருத்துவத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவை என்ன என்ன உணவுவகைகள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்.
இந்நிலையில் டைப் 2 எனப்படும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடவேண்டிய உணவு வகைகள் என்று ஒரு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஓட்ஸ் கஞ்சி, தக்காளி,கிரீன் டீ ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதனை காலையில் சாப்பிடுவதால் குருதியின் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த உணவை நீங்கள் பின்பற்றலாமே..!
Dr.ரமேஷ்
தொகுப்பு அனுஷா.