புதியவை

Friday, July 7, 2017

நம்பிக்கை

வெறும் கல்லிற்கு
கற்பனை கொடுத்து

உளியால்
உருவம் கொடுத்து

சிலையாக்கி
கடவுளென
பெயரும் கொடுத்து

கருவறையில்
நிறுத்தியும்
உருப்பெறாத கல்

மனிதனின்
நம்பிக்கையில் தான்
உயிர்த்தெழுந்து நிற்கிறது
கடவுளாக.......