புதியவை

Friday, September 22, 2017

முதுகில் இருக்கும் கருமையை போக்க சிறந்த அழகுக்குறிப்புகள்.

நாம் முதுகிற்காக தனி கவனம் செலுத்தி எதையும் செய்வதில்லை. முகம், கை, கால்களின் அழகை பராமரிக்கும் நாம் முதுகை கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை. நம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு சரும பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் முதுகுப்பகுதிக்கு சரியான பராமரிப்பு கொடுக்காமல் இருந்தால், நீங்கள் பிளவுஸ் போடும் போது அது அசிங்கமாக இருக்கும். என்ன தான் முகம், புடவை, நகைகள் எல்லாம் அழகாக இருந்தாலும், உங்களது முதுப்பகுதி அடுத்தவர் முகம் சுழிக்கும் படியாக இருக்க கூடாது. இந்த பகுதியில் மிகச்சிறந்த டி-டேன் வீட்டு குறிப்புகளை காணலாம்.

1. தேன் மற்றும் எலுமிச்சை
1. தேன் மற்றும் எலுமிச்சை தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து உங்களது முதுகுப்பகுதி முழுவது பூசுங்கள். உங்களால் இது இயலவில்லை என்றால் யாராவது ஒருவரின் உதவியை நாடுங்கள். இதனை அரைமணி நேரம் விட்டுவிட்டு பின்னர் சோப்பு போடாமல் குளித்து விடுங்கள். இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் போக கூடாது.

2. தேன், கடலை மாவு, மஞ்சள் தூள்
2. தேன், கடலை மாவு, மஞ்சள் தூள் தேன், கடலை மாவு, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து முகம் மற்றும் உடலுக்கு பேக் போட்டுக்கொள்ளுங்கள். இதனை 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இது உடலில் இருக்கும் கருமையை நீக்கி பொழிவை தரக்கூடியது.

3. விட்டமின் இ கேப்சூல், கடல் உப்பு, தேன்
3. விட்டமின் இ கேப்சூல், கடல் உப்பு, தேன் விட்டமின் இ கேப்சூல், கடல் உப்பு, தேன் ஆகியவை சேர்ந்த கலவையை எடுத்து உடலுக்கு நன்றாக தேய்த்து குளிக்கவும். இவ்வாறு செய்வதால் மேனி இழந்த பொழிவை திரும்ப பெற்று, கூடுதல் நிறம் பெறும். விட்டமின் இ கேப்சூல் மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

4. தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு
4. தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றில் இயற்கையாக ப்ளிச் செய்யும் தன்மை உள்ளது. இது தழும்புகளை இருந்த இடம் தெரியாமல் மறைய செய்யும். இதனை உடலில் நன்றாக தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதனை அடிக்கடி செய்தால் மிகச்சிறந்த பலன் கிடைப்பது உறுதி.

5. ஆரஞ்சு தோல்

5. ஆரஞ்சு தோல் ஆரஞ்சு தோலை காய வைத்து பௌடர் ஆக்கி கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் ஆரஞ்ச் பௌடரையும் பயன்படுத்தலாம். இந்த பௌடரை ரோஸ் வாட்டர் உடன் கலந்து அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விட்டு வாஷ் செய்தால் கருமை நீங்கும்.