புதியவை

Friday, September 22, 2017

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காயின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?


கோவைக்காய் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இதை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்க்கிறார்கள்? வாரம் ஒருமுறையாவது இறைச்சி சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை, ஈர்ப்பு, வெறி இருக்கும் நம்மிடம், அதே அளவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த காய்கறிகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லையே, ஏன்?


This Veggie Will Help To Control Diabetes

கோவைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் என தெரியாது... ஆனால், இதில் இத்தனை நன்மைகள் இருக்கிறது என தெரிந்தால் நீங்களும் இதை விரும்பி சாப்பிடுவீர்கள். சாம்பார், பொரியல் எப்படி வேண்டுமானாலும் இதை சமைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை வெறுமென கழுவி மென்று வந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். கல்லீரல் பலம்! மிக எளிதாக, விலை குறைவாக கிடைக்க கூடியது கோவை காய். இது கல்லீரலின் பலத்தை அதிகரிக்கும். நீரிழிவு நோய்க்கு உகந்த மருந்தாகவும் செயற்படுகிறது. நோய் எதிர்ப்பு! கோவைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இது சரும நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. 


சரும அரிப்பு, சரும எரிச்சல் போன்றவைக்கு கைவந்த மருந்து கோவைக்காய். மேலும், இது சளியை குறைக்கவும் உதவும். இலைகள்! கோவை செடி இலைகளை எடுத்து சரும பிரச்சனைகளுக்கு மருந்து உருவாக்கலாம். ஐந்து கோவை இலைகளை எடுத்து சுத்தம் செய்து, நீரில் கொதிக்க வைத்த நீரை அதில் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பிறகு, இலைகளை வடிக்கட்டி நீரை குடித்து வந்தால் சரும தடிப்புகள், அரிப்பு போன்றவை குணமாகும். இதர பகுதிகள்! கோவைக்காய், இலைகள் மட்டுமின்றி, கோவைக்காய் செடி தண்டும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இதன் இலைகளை எடுத்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அந்த பசையை தைலம் போல காய்ச்சிக்கொள்ளவும். இந்த தைலத்தை சொறி, சிரங்கு, படை போன்ற சரும கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். வாய் புண்! இதன் இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து மென்று சாப்பிட்டு வந்தால் வாய் புண், வயிற்று புண், குடல் புண் போன்றவை சரியாகும். உதட்டு வெடிப்புகளும் குணமாகும். மேலும், இந்த கோவைக்காய் நுரையீரல் தொற்று, நெஞ்சு சளி போன்றவற்றையும் போக்கும் குணம் கொண்டுள்ளது.