புதியவை

Friday, September 29, 2017

தொப்பையை மிக விரைவாக குறைக்க உதவும் அற்புத மூலிகை பொடி!


உத்வர்தனா என்ற சிகிச்சை முறையானது உங்களது தொப்பை பகுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு வலிமையையும் தருகிறது. இந்த சிகிச்சையில் எண்ணெய் உடன் சில மூலிகை பொடிகளை கலந்து உபயோக்கின்றனர். இந்த பவுடரை கொண்டு மசாஜ் செய்யும் போது இது சருமத்துளைகள் வழியாக செல்கிறது இது உடல் எடையை குறைக்க உதவும்.
தொப்பை குறைய..

தொப்பை குறைய.. உங்களது ஒழுங்கற்ற வாழ்க்கை முறை பழக்கங்களால் உங்களது இடுப்பு பகுதியில் அதிமாக கொழுப்பு தேங்கும். உத்வர்தனா என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இது டோன் செய்யவும், உடலை வலிமைப்படுத்தவும் செய்யப்படுகிறது.

தேவையான மூலிகைகள்
தேவையான மூலிகைகள் 
-கொள்ளு - 500 கிராம் 
-திரிபலா பௌடர் -250 கிராம் 
-சங்கல் கோச்டம் (Chengalva Kostu ) - 50 கிராம் 
-லோத்திரம் (Lodhra ) - 50 கிராம் 
-வசம்பு - 100 கிராம்

செய்முறை

செய்முறை மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிசேம் ஆயிலுடன் கலந்து கொள்ள வேண்டும். முகம் மேல் நோக்கி உள்ள படி படுத்துக்கொள்ள வேண்டும். இதனை முதலில் இடதுபுறமிருந்து ஆரம்பிக்க வேண்டும். கொழுப்புகள் உள்ள இடத்தில் இடமிருந்து வலமாக 4-6 முறை கிடைமட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இடது கையை தொப்புளுக்கு வலது புறத்தில் வைத்து இரண்டு கைகளால் மெதுவாக கடிகார முள் திசையில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை பெரிதாக்கி வயிறு முழுதும் மசாஜ் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை சிறிதாக்கி வயிற்றின் நடுப்பகுதியை அடைய வேண்டும்
தேவைப்படும் காலம்


தேவைப்படும் காலம் இந்த மசாஜ் ஆனது உங்களது தொப்பையை இயற்கையான முறையில், விரைவாக குறைக்க உதவுகிறது. இதனால் எந்த விதமான பக்கவிளைவுகளும் வராது. இதனை நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

எப்படி செயல்படுகிறது?


எப்படி செயல்படுகிறது? இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மூலிகை பவுடர்கள் காய்ந்த மற்றும் வெப்பமான சூழலை உருவாக்கி தருகின்றன. இதனை உடலில் அப்ளை செய்யும் போது, ஒரு வித உராய்வு ஏற்பட்டு, இது சரும துளைகளை திறக்கின்றன. இது வெப்பத்தை அதிகப்படுத்தி, கொழுப்பை குறைக்கும் மெட்டபாலிசத்தை தூண்டுவதன் மூலம் கொழுப்பை குறைக்கிறது.