புதியவை

Monday, November 13, 2017

உங்கள் நாக்கில் இரும்புச் சுவை உணர்கிறீர்களா? இதெல்லாம்தான் காரணமாம்!!

சில சமயம் உங்கள் நாக்கில் உலோகச் சுவையை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இரும்பு சாமான்களை சுவைப்பது போல உணர்வீர்கள். பெரும்பாலும் காய்ச்சல், அல்லது உடல் நலம் சரியில்லாதபோது நாம் உணர்ந்திருக்கிறோம். இந்த உலோகச் சுவை எதற்கு வருகிறது என நாம் கண்டுகொள்வதில்லை. சில நாட்களில் அது மறைந்ததும், நாமும் மறந்துவிடுகிறோம். எதையும், நம்மைச் சுற்றியும் நடப்பதை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது போல், நமக்குள் நடக்கும் சிறு மாற்றங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் உதாசீனபப்டுத்துகிறோம். தெரிந்து வைத்துக் கொண்டால் தப்பில்லையே. அவை ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது நாம் சாப்பிட்ட உணவுகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம். என்னவென்றுதான் தெரிந்து கொள்ளலாமே. வாருங்கள்.

மாத்திரைகள் :
மாத்திரைகள் : பாராசிட்டமால், அன்டிபயாடிக் மற்றும் சிறு நீரக பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் சில மாத்திரைகளால் இவ்வாறான உலோகச் சுவை வருவதுண்டு. அவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று வேறு கம்பனி அல்லது வேறு மாத்திரைகளை பரிசீலனைப் பெற்று வாங்குதல் அவசியம்.

மோசமான பற்களின் ஆரோக்கியம் :
மோசமான பற்களின் ஆரோக்கியம் : உங்கள் பற்கள் மோசமாக பாதிப்படைந்தால், ஈறு பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மாதிரி சுவையை உணர்வீர்கள். அதிகமான கிருமிகளின் தாக்குதலால் ஈறுகளில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்பட்டு, இவ்வாறான சுவையை தரும். எதர்கும் ஈறு, பற்கள் பிரச்சனைகள் இருக்கா என சோதித்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பிணிகள் :
கர்ப்பிணிகள் : முதம் மூன்று மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த மாதிரியான உலோசக் சுவை உண்டாகும். இதற்கு காரணம் அவர்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களே ஆகும். முதல் மூன்று மாதங்கள் பிறகு இந்த பிரச்சனை மறைந்துவிடும்.

நரம்புக் கோளாறுகள் :
நரம்புக் கோளாறுகள் : நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால், கட்டுப்படுத்தும் திறன் கொண்ட மூளை சுவையுணர்ச்சியை தாக்கும். இதனால் சுவையின் திறன் மட்டுப்படுத்தி, உலோகச் சுவை உணர்வீர்கள்.

காது பிரச்சனை :
காது பிரச்சனை : உங்கள் காதுகளில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தால் அதனால் கூட நாக்கில் உலோகச் சுவை ஏற்படுமாம். காது மட்டுமல்லாது, வாயிலும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த சுவை உண்டாகும்.


சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்கள் எச்சில் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் உலோகச் சுவை தடுக்கப்படுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவை அருமையான பலன்களை தரும்.

நீர் அதிகம் குடித்தல் :
நீர் அதிகம் குடித்தல் : உங்கள் உடம்பில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும் என்பதால் அதிகமாக நீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள், ஸ்மூத்தி போன்ரவை அடிகக்டி குடித்தால் ஓரிரு நாட்களில் மறைந்துவிடும்.

புதினா, ஏலக்காய் :
புதினா, ஏலக்காய் : புதினா, ஆரஞ்சு சுவையுள்ள இனிப்பு மிட்டாய்கள், ஏலக்காயை வெறும் வாயில் மெல்லுதல் போன்றவையும் நல்ல பலன்களை தரும்.