புதியவை

Thursday, February 22, 2018

உங்க நுரையீரல் பெரும் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் முறையாக செயல்படுவதில் நுரையீரல் முக்கிய பங்கை வகிக்கிறது. இது ஒவ்வொரு நொடியும் சுவாசித்து, உடலுறுப்புக்களின் செயல்பாட்டை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. ஒருவர் மூச்சை உள்ளிழுக்கும் போது ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டு, இரத்தத்துடன் சேர்த்து ஒட்டுமொத்த உடலுறுப்புக்கள் மற்றும் செல்களுக்கு கிடைக்கிறது. மூச்சை வெளிவிடும் போது, கார்பன்டைஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. உலகில் ஏராளமானோர் நுரையீரல் பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார்கள். 

அமெரிக்காவில் மட்டும் சுமார் 11 மில்லியன் மக்களுக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக அமெரிக்க நுரையீரல் அமைப்பு கூறுகிறது. இத்தகையவர்களது மூச்சுக்குழாய் குறுகிய நிலையில் இருப்பதால், அவர்களுக்கு சுவாசிப்பதே சிரமமாக இருக்குமாம். மற்றொரு அமைப்பின் ரிப்போர்ட்டின் படி, 12 முதல் 24 மில்லியல் மக்கள் தங்களுக்கு இப்பிரச்சனை இருப்பதே தெரியாமல் இருப்பதாகவும் கூறுகிறது. 

Signs That Indicate Your Lungs Could Be In Trouble

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன், வேறு சில நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காச நோய், எம்பிஸிமா மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்றவைகளாலும் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். தற்போது புகைப்பிடிக்கும் பழக்கம் ஒரு ஃபேஷனாகி விட்டது. இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, இந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் நோய்களுக்கான அபாயம் அதிகம் உள்ளது. மேலும் நுரையீரல் நோய்களுக்கு வேறு சில முக்கிய காரணிகளும் உள்ளன.

அதில் காற்று மாசுபாடு, பணியிட வாயுக்கள், மரத்தூள் அல்லது பிற துகள்களும் அடங்கும். உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், முதலில் நுரையீரல் பிரச்சனைகளுக்கான ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனால் ஆரம்பத்திலேயே நுரையீரல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம். சரி, இப்போது நுரையீரல் பிரச்சனையை வெளிக்காட்டும் சில அறிகுறிகளைக் காண்போம்.

தொடர்ச்சியான இருமல்

தொடர்ச்சியான இருமல்
பொதுவாக இருமல் எதனால் வருகிறது? சுவாச பாதையில் எரிச்சலூட்டுபவைகள் மற்றும் சளிகள் இருந்தால், அவற்றை வெளியேற்றுவதற்காக வருபவை தான் இருமல். இந்த இருமலானது ஒருவருக்கு பல நாட்களாக இருந்தால், நுரையீரல் முறையாக செயல்படுவதில்லை என்று அர்த்தம். 

ஒருவரது நுரையீரல் ஆரோக்கியமற்ற உள்ளது என்பதை நாள்பட்ட தொடர்ச்சியான இருமலின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதிலும் இருமலுக்கு மருந்து எடுத்தும், இருமல் சரியாகாவிட்டால், நிலைமை மோசமாக உள்ளது என்று அர்த்தம். சில சமயங்களில் இருமலின் போது நெஞ்சு வலிக்கும். இந்த வலி அப்படியே பரவி தோள்பட்டை வரை செல்லும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மூச்சுத் திணறல்


மூச்சுத் திணறல்
அன்றாட வேலைகளை செய்யும் போது ஒருவர் மூச்சுத் திணறலை அனுபவித்தால், உங்கள் நுரையீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். எப்போது ஒருவரது நுரையீரல் கடுமையாக வேலை செய்தாலோ அல்லது சுவாசக் காற்று இயல்புக்கு மாறாக சென்று வருவதில் சிரமத்தை சந்தித்தாலோ வருவது தான், மூச்சுத்திணறல். இது மூச்சுக்குழாயில் ஏற்படும் சில வகையான அடைப்புக்களாலும் ஏற்படலாம். எனவே இம்மாதிரியான நிலைமையில் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையைப் பெறுங்கள். மேலும் தினமும் மூச்சு பயிற்சியை செய்து வாருங்கள். இதனால் சாதாரண பிரச்சனையாக இருந்தால், சரியாகிவிடும்.

அதிகளவு சளி

அதிகளவு சளி
இருமல் வருவது சாதாரணமான ஒன்று. சில சமயங்களில் சளியின் உற்பத்தியாலும் வரும். சளியானது கிருமிகள், அழுக்குகள், தூசிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு நுரையீரலினுள் செல்ல உதவி புரியும். இத்தகைய சளியின் உற்பத்தி அதிகமாகும் போது, ஒருவரது இருமல் மிகவும் கடுமையாக இருக்கும். அதோடு இருமலின் போது வெளிவரும் சளியின் நிறம், அடர்த்தி, அளவு மற்றும் நாற்றம் கூட வீச ஆரம்பிக்கும். ஒருவரது சளி மஞ்சள், பச்சை அல்லது இரத்தம் கலந்து வெளியேறினால், நுரையீரல்ல ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். முக்கியமாக இரத்தம் கலந்த சளி வெளியேறினால், அது நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இதுக்குறித்து உடனே மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் முக்கியம்.

தொடர்ச்சியான மூச்சுத்திணறல்

தொடர்ச்சியான மூச்சுத்திணறல்
மூச்சுத்திணறல் மூச்சுக்குழாய் குறுகி இருந்தால் ஏற்படுவதாகும். இப்படி குறுகலான பாதையில் காற்று கஷ்டப்பட்டு சென்று வரும் போது, திடீரென்று காற்றை சுவாசித்து வெளியேற்றும் வேகம் அதிகரிக்கும் போது, சப்தத்துடனான மூச்சுத்திணறல் ஏற்படும். இது ஆஸ்துமா அல்லது எம்பிஸிமாவிற்கான ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்றாகும். சில சமயங்களில் இது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியும் கூட. எனவே இம்மாதிரியான நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

கால் வீக்கம்

கால் வீக்கம்
பாதம் மற்றும் கால்களில் வீக்கம், வலி இருந்தால், அதுவும் நுரையீரலில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எப்போது நுரையீரல் சரியாக செயல்படவில்லையோ, அப்போது உடலுறுப்புக்கள் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இந்நிலையில் உடலினுள் உள்ள திரவங்களும் கோர்த்துக் கொள்ளும். இதன் விளைவாக கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படும். 

மேலும் மோசமான நுரையீரல் செயல்பாட்டினால், இதயத்தால் போதிய இரத்தத்தை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு அனுப்ப முடியாமல் போகும். இதனால் இந்த உறுப்புக்களில் இருந்து வெளியேற்றப்படும் டாக்ஸின்கள் வெளியேற்றப்படாமல் அப்படியே தங்கி, வீக்கத்தை உண்டாக்கும். ஆகவே கால் வீக்கத்தைக் குறைக்க கால்களை தொங்கப் போட்டு உட்காராமல், கால்களை நீட்டிக் கொண்டு உட்காருங்கள். நிலைமை மோசமாவது போல் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்

காலை தலைவலி


காலை தலைவலி

காலையில் எழுந்ததும் திடீரென்று தலைவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் நுரையீரல் பிரச்சனைகளுள் ஒன்றான நாள்பட்ட நுரையீரல் நோய் இருந்தால், இப்படி தான் இருக்கும். இதற்கு காரணம் தூக்கத்தின் போது சரியாக சுவாசிக்க முடியாமல், உடலினுள் கார்பன்டைஆக்ஸைடு அளவு அதிகமானால் ஏற்படுவதாகும். இந்த கார்பன்டைஆக்ஸைடு மூளையில் உள்ள இரத்த நாளங்களில் அதிகமாகி, கடுமையான தலைவலியை உண்டாக்கும். 


சோர்வு/களைப்பு

சோர்வு/களைப்பு
நன்கு தூங்கி எழுந்த பின்னரும், மிகுதியான சோர்வு அல்லது அதிகப்படியான களைப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். அதிலம் நுரையீரலில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எப்போது நுரையீரல் சரியாக வேலை செய்யாமல் உள்ளதோ, அப்போது உடலினுள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, உடலின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, உடல் மிகுந்த களைப்புடன் இருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

தூக்க பிரச்சனைகள்

தூக்க பிரச்சனைகள் 
நீங்கள் படுக்கையில் படுக்கும் போது மூச்சு விடுவதில் சிரமத்தையும், நாற்காலியில் அமர்ந்தவாறு உறங்கினால் சௌகரியமாகவும் உணர்கிறீர்களா? அப்படியனால் உங்கள் நுரையீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். படுக்கையில் படுக்கும் போது நுரையீரல் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியிருப்பதால், நல்ல தூக்கத்தைப் பெற முடியாமல் போகிறது. அதோடு சில சமயங்களில் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் இரவு நேரத்தில் இருமலும் வரும். இப்படி பல நாட்கள் உங்கள் தூக்கத்தை தடைபட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

#1

#1 
புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, நுரையீரல் நோய்கள் அல்லது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும். இது சிகரெட் பிடிப்போருக்கு மட்டுமின்றி, அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.

#2

#2 
காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் குடியிருப்பதைத் தவிர்த்திடுங்கள். ஒருவேளை இப்பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தால், மாஸ்க் எதையேனும் அணிந்து கொண்டு, பின் செல்லுங்கள்

#3

#3 
உள்அலங்கார செடிகளை வீட்டில் வளர்த்து வாருங்கள். இதனால் வீட்டினுள் உள்ள தூசிகள், அந்த செடிகளால் உறிஞ்சப்பட்டு, வீட்டினுள் நல்ல சுத்தமான காற்றோட்டத்தை உண்டாக்கும். இதனால் சுவாச பிரச்சனைகள் எதுவும் வராமல் இருப்பதோடு, நுரையீரலின் ஆரோக்கியமும் மேம்படும்.

#4

#4 
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். முக்கியமாக சுவாச பயிற்சிகளை அன்றாடம் செய்யுங்கள். இதனால் நுரையீரல் பிரச்சனைகள் மட்டுமின்றி, இதய பிரச்சனைகளில் இருந்தும் தடுக்கப்படலாம். முக்கியமாக அதிக நறுமணம் கொண்ட பொருட்களின் உபயோகத்தைத் தவிர்த்திடுங்கள்.

#5

#5

உடலை சுத்தம் செய்யும் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். முக்கியமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை அன்றாட டயட்டில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாவதோடு, உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.