புதியவை

Saturday, December 22, 2018

தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன..?

கேரளா... என்றாலே தேங்காய் எண்ணெய் தான் அதிகம் பிரபலமானது. அவர்களின் உணவுகளில் இந்த தேங்காய் எண்ணெய் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நம்ம எல்லாருக்கும் ரொம்ப நல்லாவே தெரியும் தேங்காய் எண்ணெய் எவ்வளவு பயன்கள் கொண்டுள்ளதுனு. ஆனால், இதை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுவதால என்னென்ன பயன்கள் கிடைக்கும்னு உங்களுக்கு தெரியுமா..?

Things That Happen To You Body When You Eat A Spoonful Of Coconut Oil Daily

அதுவும் உடலில் பல வகையான மாற்றங்களை ஏற்படுத்த கூடியது இந்த தேங்காய் எண்ணெய் வைத்தியம். சாதாரண தேங்காய் எண்ணெய்க்குள்ள இவ்வளவு அற்புதங்கள் இருக்கானு நீங்களே ஆச்சரியப்பட்டு பாப்பீங்க..! சரி, வாங்க, தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால் ஏற்பட கூடிய அரிய வகை பயன்களை நாம் தெரிந்து கொள்வோம்.
ஆற்றல் பெற்ற எண்ணெய்..!

ஆற்றல் பெற்ற எண்ணெய்..! 

மற்ற எண்ணெய் வகைகளை காட்டிலும் சற்று அதிக விலையுடன் விற்க கூடிய இந்த தேங்காய் எண்ணெய்யில் பலவித நன்மைகள் உள்ளன. பொதுவாக இதை சமையலுக்கும், தலைக்கு தேய்க்கவும் மட்டுமே நாம் பயன்படுத்துவோம். ஆனால், இதனை தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வருவதால் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எண்ணில் அடங்காத மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்.

வலுவான தசைகளுக்கு...

வலுவான தசைகளுக்கு... 

ஜிம்மிற்கு சென்று படாதப்பாடு படுவோருக்கே இந்த குறிப்பு. ஆமாங்க, நீங்க தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டு வருவதால் உங்கள் தசை வளர்ச்சி அதிகரிக்குமாம். பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை பெறுவதற்கு இது உதவும்.

சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு

சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு 

போதுமான அளவு நீர் அருந்தாத பலருக்கு சிறுநீரக தொற்றுகள் ஏற்பட கூடும். தேங்காய் எண்ணெய் இயற்கையிலே ஒரு ஆன்டி பையோட்டிக். எனவே, உங்களின் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை முற்றிலுமாக சரி செய்ய தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுங்க. இவை சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை அழிக்க கூடிய ஆற்றல் கொண்டவையாம்.

இந்த பிரச்சினை உங்களுக்கு உண்டா..?

இந்த பிரச்சினை உங்களுக்கு உண்டா..?

நமக்கு இடுக்கை கூடிய பல பிரச்சினைகளில் இது மிக மோசமானதே. செரிமான கோளாறு இருந்தால் யாராக இருந்தாலும் கொஞ்சம் மோசமான நிலையில் உள்ளார்கள் என்றே அர்த்தம். ஆனால், உங்களை இந்த பிரச்சினையில் இருந்து காக்க ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதுமே.

கல்லீரலுக்கும்...

கல்லீரலுக்கும்...

உடலின் மிக பெரிய உறுப்பான இந்த கல்லீரலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவ்வளவு தான். உங்களின் கல்லீரல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி தருகிறது இந்த 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய். கல்லீரல் அழுக்குகளை வெளியேற்றி அவற்றின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது.

உடல் எடை கூடுதா..?

உடல் எடை கூடுதா..?

இந்த ஹார்மோன்களும் தான் நமது உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. ஹார்மோன்களை சமநிலையில் வைத்து உடல் பருமனாகாமல் பார்த்து கொள்கிறது. மேலும், அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் இது குறைத்து விடுகிறது. அத்துடன், இதிலுள்ள நல்ல கொலஸ்ட்ரால் உடல் எடையை கூடாமல் வைக்கிறது.

புற்றுநோய்க்கும்...

புற்றுநோய்க்கும்...

புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை இந்த தேங்காய் எண்ணெய்யிற்கு உள்ளது என ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக வயிற்று பகுதியில் ஏற்பட கூடிய புற்றுநோயை இது தடுக்கவல்லது. ஏனெனில், Helicobacter pylori என்கிற பாக்டீரியா வகை வயிற்று புற்றுநோயை ஏற்படுத்த கூடியது. இந்த வகை பாக்டீரியாக்களை அழிக்க 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் தினமும் சாப்பிட்டு வந்தால் போதும்.

இதய ஆரோக்கியத்திற்கு

இதய ஆரோக்கியத்திற்கு 

தேங்காய் எண்ணெய்யில் கெட்ட கொலஸ்டரோலை கட்டுப்படுத்தி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க கூடிய ஆற்றல் உள்ளது. அத்துடன் நல்ல கொலஸ்ட்ராலையும் இது உடலுக்கு தர கூடியது. இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டஸ் ரத்த நாளங்களில் உள்ள பிரச்சினைகளை குணப்படுத்த கூடியவை.
முழு உடலுக்குமே..!

முழு உடலுக்குமே..! 

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பலவித கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் இந்த 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யிற்கு உள்ளதாம். கல்லீரல், கிட்னி, இதயம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் உறுதுணையாக இருக்கிறது.