புதியவை

Monday, December 10, 2018

தாம்பத்ய உறவில் திருப்தியில்லை... பெண்கள் ஓபன் டாக் - முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்

தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது திருப்தி இருந்தால்தான் உறவு இனிக்கும். உடல் நல பாதிப்பு மனநல பாதிப்பு இருந்தால் அந்த உறவில் திருப்தி இருக்காது. தாம்பத்ய உறவு என்பது திருமணமானவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் உகந்தது. திருமணமான தம்பதியர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கையே சூனியமாகிவிடும். திருப்தி இல்லாத உறவு ஒருவித கசப்பைத்தான் தரும். 

திருமணம் முடிந்து ஓராண்டுகள் வரை தம்பதிகளுக்கு இடையே கட்டில் மயக்கம் தீராமல் இருக்கும். குழந்தைகள் பிறந்த பின்னர் பிசினஸ், வேலை என பிசியான பின்னர் தாம்பத்ய உறவுக்கு இடையே இடைவெளி ஏற்படும். தாம்பத்ய உறவின் மூலம் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது என்று மன அழுத்தமும் நீங்குகிறது என சர்வே சொல்கிறது. உடலின் கலோரிகள் கூட கரைகின்றன என்று சொல்கின்றனர் செக்லாஜிஸ்ட்கள். இதுபற்றி எத்தனையோ சர்வேக்கள் வந்தாலும் இது கொஞ்சம் புதுவிதமானது.

survey on women sex lives

தாம்பத்ய உறவு பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று இருவேறு வகையான சர்வே முடிவுகளை பார்க்கலாம். திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்த பெண்களிடம் தாம்பத்ய உறவில் நீங்கள் எந்த அளவிற்கு திருப்தி அடைகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 31 சதவிகித பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகக் கூறியிருக்கிறார்கள். 44 சதவிகித பெண்கள் கொஞ்சம் திருப்திபட்டுக் கொள்வதாகவும், 12 சதவிகிதம் பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கருத்து கூற மறுத்திருக்கிறார்கள்.

1.முன்விளையாட்டு முக்கியம்

1.முன்விளையாட்டு முக்கியம்
பெண்களின் செக்ஸ் ஈடுபாடு பற்றி இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே எடுக்கப்பட்டது. முன்விளையாட்டுக்கள் பற்றி கேள்விக்கு பதிலளித்த பெண்கள், செக்ஸ் உறவிற்கு முந்தைய விளையாட்டுக்கள் சுவாரஸ்யமானவை என்று கூறியுள்ளனர். தாம்பத்ய உறவை விட உறவுக்கு முந்தைய முன்விளையாட்டுகள் விஷயத்தில் தமிழகப் பெண்கள் அதிக ஆர்வம்காட்டுவதாக சர்வேயில் தெரியவந்துள்ளது. 

சென்னைப் பெண்கள் இந்த விளையாட்டுக்களை 92சதவிகிதம் பேர் விரும்புகின்றனர். அதிலேயே தங்கள் ஆசை நிறைவேறுவதாக 64 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இந்த விசயத்தில் டெல்லி பெண்கள் இதில் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

2.தமிழ்நாட்டு பெண்கள்

2.தமிழ்நாட்டு பெண்கள்
தமிழ்நாட்டு தம்பதிகள் 30-35 வயதுக்கு மேல் வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. 68 சதவிகித தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல்12 நாட்கள் வரை உறவுவைத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 7 சதவிகித பெண்கள் கூறியிருக்கிறார்கள். மற்றவர்கள் மாதத்திற்கு 2 நாள் மட்டுமே உறவில் ஈடுபடுகிறார்களாம்.

3.வட இந்தியாவில் எப்படி

3.வட இந்தியாவில் எப்படி 
டெல்லி, மும்பை போன்ற நகரத்தில் உள்ள நடுத்தர வயதில் உள்ள பெண்கள் தாம்பத்ய உறவு தவிர இதர வெளி பொழுது போக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் அந்த உறவுக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள். மும்பை, டெல்லியில் 72 சதவிகிதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் மட்டுமே உறவில் ஈடுபடுவாம் என்று கூறியிருக்கிறார்கள் 28 சதவிகிதம் பேரில் பெரும்பான்மையினர் மாதத்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

4.கணவரை அழைக்கும் பெண்கள்

4.கணவரை அழைக்கும் பெண்கள் 
ஆசை வெட்கம் அறியாது என்பார்கள். ஆனாலும் அந்த விஷயத்தில் ஆசையை வெளிப்படுத்தி, தாம்பத்யத்திற்கு கணவரை அழைப்பதில் இன்னும் பெண்கள் பழைய நிலையிலே இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. மாதவிலக்கு முடிந்த அடுத்த சில நாட்களில் இயல்பாகவே தாம்பத்ய உறவுக்காக ஆசை அதிகரிக்கும். அப்போது குறிப்பால் கணவரை ஈர்த்து தயாராக்கி விடுவோம் என்றும் குறிப்பிட்ட சதவிகித பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

5.கணவரின் விருப்பம்

5.கணவரின் விருப்பம் 
81 சதவிகித பெண்கள் கணவரின் விருப்பமே அதில் தொடக்கமாக இருக்கிறது என்கிறார்கள். 7 சதவிகித பெண்கள் அவருக்கு அலுவலகத்தில் வேலை முடியும் முன்பே, போன் செய்து சீக்கிரம் வந்து விடுங்கள் உங்களுக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பால் உணர்த்துவதாக சொல்கிறார்கள். ஆபிஸ் விட்டு வரும் போது பூ வாங்கிட்டு வாங்க, அல்வா வாங்கிட்டு வாங்க என்று சைகை பாசையில் கூறி தங்களின் ஆசையை வெளிப்படுத்துவார்களாம்.

6.விமர்சனம் அவசியம்

6.விமர்சனம் அவசியம் 
தாம்பத்ய உறவு பற்றி விமர்சிக்க தேவையில்லை. ஆனாலும் இன்றைக்கு சூப்பராக இருந்தது என்றும் பரவாயில்லை இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணியிருக்கலாம் என்றும் கூறுவதில் தவறில்லை. அடுத்தமுறை அந்த தவறு நடைபெறாமல் தவிர்த்து விடலாம். வட இந்தியப் பெண்கள் 81 சதவிகிதம் பேர் உறவிற்குப்பின் அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக கூறியிருக்கிறார்கள். 

ஆனால் உறவு முடிந்த உடன் எப்படி இருந்தது என்பது பற்றி பேசுவதில் தமிழ்நாட்டுப்பெண்கள் கூச்ச சுபாவத்துடன் இருக்கிறார்கள். அதுபற்றி பேசினால் கணவருக்குப் பிடிக்காது என்று 42 சதவிகிதப் பெண்கள் கூறியிருக்கின்றனர். குறிப்பால் உணர்த்துவதாக 29 சதவிகித பெண்களும், தயக்கமின்றி பேசுவோம் என்று 14 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். ஆனால்15 சதவீத பெண்களோ அவரால் முடிந்தது அவ்வளவுதான் இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியிருக்கின்றனர்.

7.கிளைமேக்ஸ் எப்படி இருக்கும்

7.கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் 

தாம்பத்ய உறவின் முலம் உடல் ஆரோக்கியம் அதிகமாக இருந்தாலும் கிளைமேக்ஸ் மூலம் ஒருவித புது சுகத்தை அனுபவிக்கின்றனர். அது அவர்களின் பாட்னர் மூலம் கிடைக்கும் திருப்தியை பொறுத்து அமைகிறது. 62 சதவிகித பெண்கள் சுய இன்பம் மூலம் ஆர்கஸம் அடைவதாகவும், 34 சதவிகித பெண்கள் ஓரல் புணர்ச்சி மூலம் ஆர்கஸம் அடைவதாகவும், 27 சதவிகித பெண்கள் வெஜினாவை தூண்டுவதன் மூலம் ஆர்கஸம் அடைவதாகவும், 26 சதவிகித பெண்கள் முன் விளையாட்டுக்கள் மூலமே கிளைமேக்ஸை எட்டுவதாக கூறியுள்ளனர். 

இதை வைத்து பார்க்கும் போது கிளைமேக்ஸை எட்டுவது மட்டுமே தாம்பத்ய உறவில் திருப்தியை அடைந்து விடுவதில்லை. கணவன் மனைவி இடையேயான பினைப்பு உறவில் திருப்தியை ஏற்படுத்துகிறது. ஆண் பெண் இனைவு மட்டுமே தாம்பத்ய உறவில் திருப்தியை ஏற்படுத்தி விடுவதில்லை.

8.சீனாவில் எப்படி

8.சீனாவில் எப்படி
மக்கள் தொகையை பெருக்குவதில் நம்முடன் போட்டி போடுகிறது சீனா. தாம்பத்ய உறவு பற்றி இந்தியா போல சீனாவிலும் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இதில் 25 சதவிகிதம் பேர், தங்கள் கணவனால் தங்களுக்கு முழு செக்ஸ் திருப்தி தர முடியவில்லை என்று கூறியிருக்கின்றனர். 54.2 சதவிகிதம் பெண்களுக்கு திருமணத்துக்குப் பின்னர் தாம்பத்ய உறவு மிகவும் முழுமையாக தேவை என்று கூறியிருக்கின்றனர். சீனப் பெண்களின் தேவையை தீர்க்கும் அளவுக்கு பெரும்பாலான சீன ஆண்களால் முடியவில்லை என்று அந்த சர்வே கூறுகிறது. சீனப் பெண்கள் இப்படி வெளிப்படையாக தாம்பத்ய உறவு விஷயத்தில் இருப்பது சீன ஆராய்ச்சியாளர்களை திகைப்படையச் செய்துள்ளது.