புதியவை

Monday, December 10, 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க தக்காளியும் தயிரும் போதும் பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க தக்காளியும் தயிரும் போதும்.

மழை காலம் முடியும் முன்பே பனி ஒரு பக்கம் கொட்டுகிறது. இதில் தோல் வறண்டு வெள்ளையாக வெடிப்புகள் வருகிறது. வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ, வீட்டில் நாம் சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன. தக்காளியும், தயிரும் தோலினை பளபளப்பாக வைக்கிறது. 


இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு குளிர்காலத்தில் முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை உணர்வார்கள்.


home remedies winter season

சரும பராமரிப்புக்கு என சந்தையில் விற்கும் விலை அதிகமான பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும், கோதுமை மாவு, சர்க்கரையும், தேனும் கூட போதும் சருமத்தை ஜொலிக்க வைக்கலாம்.


தண்ணீர் மகத்துவம்


தண்ணீர் மகத்துவம்
சரும பாதுகாப்பு சரும வறட்சியை தடுக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதே. எந்த அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது. பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட சருமம் பனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும்

தக்காளி தயிர்

தக்காளி தயிர் 
பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.


ஆரஞ்சு, தேன்


ஆரஞ்சு, தேன் 
ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை பனிகால சரும பாதுகாப்புக்கு ஏற்றவை. வீட்டில் கார்ன் ப்ளவர் இருந்தால் அதனுடன் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் பளபளக்கும்.


வைட்டமின் சத்துக்கள்


வைட்டமின் சத்துக்கள்
வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ சத்துள்ள உணவுகளை, பழங்களை அதிகம் சாப்பிடலாம். பனி காலத்தில் குளிர்காற்றில் சருமத்தை வெளியில் காட்டாமல் இருப்பதே நல்லது. உடலை மூடி நன்றாக கவர் செய்யும் ஆடைகளை அணியலாம்.


பன்னீரும் தேனும்


பன்னீரும் தேனும்
ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் உடன் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் அப்ளை செய்து ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் வறட்சி நீங்கி முகம் ஜொலிக்கும்.

வெண்ணெய் இருக்க பயமேன்

வெண்ணெய் இருக்க பயமேன் 
பனிக்காலத்தில் அதிகம் மேக்அப் போட வேண்டாம். வீட்டில் எப்போதும் வெண்ணெய் வைத்துக்கொள்வது நல்லது. உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் தடவலாம். ரசாயன கலப்பு உள்ள மாய்ச்சரைசர்களை தவிர்த்து விடுவது நல்லது. ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும். ஆவகேடோ பழத்தை மசித்து அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து பூசலாம்.


கற்றாழை, பப்பாளி

கற்றாழை, பப்பாளி 
வீட்டு தோட்டத்தில் கற்றாழை வளர்ப்பது அவசியம், அதேபோல பப்பாளி மரமும் இன்றைக்கு பலரும் வளர்க்கின்றனர். மழை, பனி காலத்தில் இவை நன்கு செழித்து வளர்ந்திருக்கும். இரண்டுமே சரும வறட்சியை போக்கும் பண்பு கொண்டவை. காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிக்க வறட்சி நீங்கும். பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.


வேப்ப எண்ணெய் வெள்ளரிக்காய் தெரபி


வேப்ப எண்ணெய் வெள்ளரிக்காய் தெரபி 
வேப்பிலை நோய் நிவாரணி. அம்மை போட்டவர்கள் தண்ணீர் ஊற்றும் போது வேப்பிலை, மஞ்சளை போட்டு குளிக்க வைப்பார்கள். வீட்டின் கொல்லைப்புறத்தில் வேப்ப மரம் இருந்தால் அதன் இலைகளை பறித்து அரைத்து குளிக்கும் நீரில் வாரம் ஒருமுறை கலந்து குளிக்கலாம். வேப்ப எண்ணெய் சரும வறட்சியை நீக்கும். இதனை கை, கால்களில் பூசலாம். வெள்ளரிக்காயில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. இது உடம்பின் வறட்சியை நீக்கும். வெள்ளரிக்காயை சாப்பிடுவதன் மூலம் சரும வறட்சி நீங்கும். அதே போல வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கை கால்களில் வைத்துக்கொள்ள வறட்சியை தடுக்கலாம்.


பால், பாதாம், எலுமிச்சை


பால், பாதாம், எலுமிச்சை
எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். சருமத்தை சாஃப்ட் ஆக்கும். வறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும்.


கேரட், பால் சிகிச்சை


கேரட், பால் சிகிச்சை
நன்றாக தண்ணீர் குடித்தாலே சரும வறட்சி நீங்கும். வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து அரைத்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும். சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும்

எண்ணெய் மசாஜ்

எண்ணெய் மசாஜ் 
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவை சருமத்தை நன்றாக பாதுகாக்கும். இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து ஊறவைத்து சில நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். சரும வறட்சி நீங்குவதோடு குளிர்கால பிரச்சினைகளும் தீரும். விளக்கெண்ணெய், கிளிசரின் போன்றவை சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. விளக்கெண்ணெய், எலுமிச்சை, கிளிசரின் சேர்த்து மிக்ஸ் செய்து உதட்டில் தடவ உதடு வறட்சி, வெடிப்புகள் நீங்கும்.