புதியவை

Monday, December 10, 2018

இந்த பறவைகள் உங்க வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் வருமாம்..

ஜோதிடப்படி வீட்டிற்குள் இந்த பறவைகள் மற்றும் விலங்குகள் நுழைவது நம்முடைய வீட்டுக்கு துரதிஷ்டத்தைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது, அவை என்னென்ன பறவைகள் என்று பார்க்கலாம் வாங்க.
birds and animals that bring bad luck

ஜோதிடப்படி சில பறவைகள் மற்றும் விலங்குகள் வீட்டினுள் நுழைவது துரதிர்ஷ்டம் என சொல்லப்படுகிறது. இந்த பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளே நுழையும் போது எதிர்மறை ஆற்றலையும் சேர்த்தே கொண்டு வந்து விடுகின்றன. அந்த மாதிரியான துரதிர்ஷ்டமான பறவைகள் மற்றும் விலங்குகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

புறா

புறா
புறா பொதுவாக பாழடைந்த கட்டிடங்கள், வீட்டு கூரைகள் மேல் தான் அதிகமாக காணப்படும். இது ஜன்னல் வழியாக இடி, மழை மற்றும் மின்னல் ஏற்படும் போது வீட்டினுள் நுழையும். அதற்கு தகுந்தாற் போல் ஒரு இடத்தை கண்டறிந்து விட்டால் கூடு கட்ட ஆரம்பித்து விடும். இதனால் நிறைய எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது.

குளவிகள் மற்றும் தேனீக்கள்

குளவிகள் மற்றும் தேனீக்கள் 
இந்த குளவிகள் மற்றும் தேனீக்கள் கோடை காலங்களில் ஏற்படும் வெயிலை சமாளிக்க வீட்டினுள் குளிராக இருக்கும் இடத்தை நோக்கி உள்ளே நுழையும். எனவே இந்த கூட்டை கண்டதும் அகற்றுவது நல்லது. ஏனெனில் இதுவும் எதிர்மறை சக்தியை கொண்டு வந்து விடும்.


வெளவால்


வெளவால் 
வெளவால் உள்ளே நுழையும் போது எதிர்மறை ஆற்றலையும் சேர்த்தே கொண்டு வந்து விடும். அதிலும் பகல் நேரங்களில் வெளவால் நடமாட்டம் துரதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. வெளவால் இறப்பையும், எதிர்மறை ஆற்றலையும் தருகிறது. மேலும் இதனால் பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிடும்.


ஆந்தைகள்


ஆந்தைகள் 
ஆந்தைகள் பொதுவாக வீட்டினுள் நுழைவதில்லை. இது பொதுவாக இரவு நேரங்களில் அதிகமாக காணப்படும். வீட்டில் இருக்கும் ஜன்னல்,சிறிய பாதை வழியாக இதனால் உள்ளே நுழைய முடியாது. பெரிய கதவுகள் வழியாக மட்டுமே இது உள்ளே நுழையும். ஆந்தை கள் நீண்ட நேரம் வீட்டில் தங்குவது அபசகுனமாக கருதப்படுகிறது.


கருப்பு பூனைகள்


கருப்பு பூனைகள் 
வீட்டினுள் கருப்பு பூனைகள் தீடீரென்று உள்ளே நுழைவதும், தங்குவதும் அபசகுனமாக கருதப்படுகிறது. இது ப்ளாக் மேஜிக்கின் அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு அருகில் பூனை தங்கி இருந்தாலும் கெட்ட சக்தியாக கருதப்படுகிறது.