புதியவை

Wednesday, January 9, 2019

இதையெல்லாம் சாப்பிடறதாலதான் உங்களுக்கு சீக்கிரமாகவே வயசாகுது..!

எப்போதும் அதிக இளமையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும் தான். இதற்காக பெரிய அளவில் என்னென்னவோ செய்வோம். ஆனால், இவை அனைத்தும் அந்த அளவிற்கு பயன் தருவதில்லை. நாம் செய்ய கூடிய ஒரு சில விஷயங்கள் தான் நமது உடல் நலத்தை கெடுத்து சீக்கிரமாகவே வயதாக வைக்கிறது.

இதையெல்லாம் சாப்பிடறதாலதான் உங்களுக்கு சீக்கிரமாகவே வயசாகுது..!

குறிப்பாக இதில் ஒரு சில உணவும் சேரும். இன்றைய விஞ்ஞானிகள் கூட எப்படி இளமையாக இருக்க வேண்டும் என்பதை பற்றிய ஆராய்ச்சியில் மிக துரிதமாக இறங்கியுள்ளனர். இளமையாக இருக்க ஒரு சில உணவுகளை சாப்பிடுவதை விட, முதலில் இந்த பதிவில் கூறும் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலே போதும். சரி, வாங்க அவை என்னென்ன உணவுகளை என்பதை பார்ப்போம்.

தின உணவுகள்..!

தின உணவுகள்..! 
தினமும் நாம் சாப்பிட கூடிய உணவுகள் தான் நம்மை சீக்கிரத்திலே வயதானவரை போன்ற தோற்றத்தை தருகிறது. அதிலும் முகத்தில் வயதானவரை போன்ற சுருக்கங்களையும் இது ஏற்படுத்துகிறது. இது நாம் அன்றாடம் செய்ய கூடிய சில பழக்க வழக்கங்களாலும் நடக்கிறது

ஒமேகா 3 உணவுகள் இல்லையா..?

ஒமேகா 3 உணவுகள் இல்லையா..? 
உங்களின் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்ட உணவுகளான மீன், நட்ஸ், பருப்புகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ளா விட்டால் விரைவாக வயதாக கூடும். இது மெல்ல மெல்ல அதிகரித்து முக சருமத்தின் தோற்றத்தையும் மாற்றி விடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் 
நாம் அன்றாடம் சாப்பிட கூடிய உணவுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கு அதிக பக்க விளைவுகளை தரும். மேலும், சீக்கிரமாகவே வயதாக கூடிய தன்மை இந்த உணவிற்கு உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எப்போதும் ஏ.சியா..?

எப்போதும் ஏ.சியா..? 
இன்றைய நவீன கலாச்சாரத்தில் எந்நேரமும் ஏ. சியிலே இருப்பது தான் ஃபேஷனாக மாறியுள்ளது. இது பலவித ஆபத்தை நமது உடலில் ஏற்படுத்த கூடும். குறிப்பாக நமக்கு சீக்கிரமாகவே வயதாக வைத்து விடும். எனவே, 10 முதல் 15 நிமிடம் இளம் வெயிலில் இருப்பது நல்லது.

அடிக்கடி வருத்தலா..?

அடிக்கடி வருத்தலா..?
ஒரு முறை வறுத்த உணவை மறுபடி மறுபடியும் வறுத்து சாப்பிடுவதால் பலவித அபாயங்கள் உங்களுக்கு ஏற்படும். விரைவிலே வயதாவதோடு, உங்களுக்கு புற்றுநோய் அபாயத்தையும் இது தர கூடுமாம். எனவே, வறுத்த உணவை தவிர்ப்பதே நல்லது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்
உணவில் அதிகமாக பால் பொருட்களை சேர்த்து கொண்டால் சிறு வயதிலே வயதான தோற்றத்தை தர கூடும். மேலும், நமது சருமத்தில் உள்ள collagen-யை பாதித்து தோற்றத்தை மாற்றி விட கூடும். ஆதலால், முடிந்த வரையில் அதிகமாக இந்த பால் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி
நாம் தெரிந்து செய்ய கூடிய தவற்றில் இதுவும் ஒன்று. அதாவது சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள செல்கள் விரைவிலே பாதிப்படைந்து, வயதான தோற்றத்தை தந்து விடுகிறது. இதனால் முகத்தில் சுருக்கங்களும் உடனடியாக வந்து விடுகின்றன.
குறைந்த தூக்கமா..?

குறைந்த தூக்கமா..? இரவு முழுவதும் யாருடனாவது கடலை போட்டுவிட்டு, தூங்காமல் இருப்பதால் பல ஹார்மோன் மாற்றங்கள் நமது உடலில் ஏற்படும். ஹார்மோன்கள் மாற்றம் நமது உடல் எடையை கூட்டி, மூளையை மழுக்கடித்து விடும். எனவே, வயதானவரை போன்று நீங்கள் உணர்வீர்கள்.

கார்ப்ஸ்க்கு நோ நோ..!

கார்ப்ஸ்க்கு நோ நோ..!
பலர் தாங்கள் சாப்பிடுவது கார்ப்ஸ் என்பதை கூட அறியாமலே சாப்பிடுகின்றனர். குறிப்பாக பிரட், பிஸ்கட், கேக், போன்றவற்றை அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இவற்றில் உள்ள கார்போஹைட்ரெட்ஸ் தான் வயதான சருமத்தை தருகிறது.

வேண்டாமே..!

வேண்டாமே..!
நமது வாழ்வில் ஒரு சில பழக்கத்தை கட்டாயம் தவிர்த்து விடுவது மிக நல்லது. அவற்றில் முதன்மையானது புகையும், மதுவும். இவை இரண்டுமே உங்கள் தோற்றத்தை முழுவதுமாக மாற்றி வயதை கூட்டி விடுகிறதாம். எனவே, இந்த பழக்கங்கள் எப்போதும் வேண்டாமே.