புதியவை

Tuesday, February 19, 2019

இந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்துள்ளது என்று அர்த்தம்!

சாதாரணமாக நம் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால் அதை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. இதுவே உடல் முழுக்க பிரச்சினையாக இருந்தால் நிச்சயம் அதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். உடலில் ஏற்பட கூடிய சில மாற்றங்கள் நம்மை பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், ஒரு சில மாற்றங்கள் நம்மை மோசமான நிலைக்கு தள்ளி விடும். இது ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் ஏற்ப மாறுபடும்.

ஆண்களுக்கு வேறு விதமாகவும் பெண்களுக்கு வேறு விதமாகவும் உடல் மாற்றங்கள் உண்டாகும். இருவருக்கும் உண்டாக கூடிய பாதிப்புகளில் ஒன்று தான் சிறுநீர்ப்பை தொற்று. இதனை சாதாரணமாக நினைத்து கொள்ளாதீர்கள். இதனால் ஏராளமான பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான அறிகுறிகளை ஆரம்பத்திலே கண்டுபிடித்து விட்டால் குணப்படுத்துவது எளிது. இல்லையேல் பிரச்சினை தான். இனி இதற்கான 8 முக்கிய அறிகுறிகளை நாம் அறிந்து கொள்வோம்.


சிறுநீர்
காரணமே இல்லாமல் அடிக்கடி நீங்கள் சிறுநீர் கழித்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். சில சமயங்களில் இவை உங்களுக்கான ஆபத்தான நிலையை குறிக்கிறது. இது போன்ற அறிகுறி இருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகுங்கள்.


வலி 

சிறுநீர் கழிக்கும் போது உங்களின் அந்தரங்க உறுப்பில் வலி அல்லது எரிச்சல் போன்று ஏற்பட்டால் அவை சிறுநீர்ப்பை தொற்றுகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இவை சில சமயங்களில் பெண்களுக்கு கருப்பையிலும் வலியை உண்டாக்கலாம்.


துர்நாற்றம் 

சிறுநீர் கழிக்கும் போது ஒருவித நாற்றம் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். சிறுநீர்ப்பையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தான் இப்படிப்பட்ட துர்நாற்றம் உண்டாகும். மேலும் இவை பாக்டீரியாக்களினால் ஏற்பட கூடிய தொற்றாகவும் இருக்கலாம்.


பசியின்மை

ரொம்ப நேரம் சாப்பிடாமல் இருந்தும் பசி எடுக்கவில்லையா..? இது கூட உங்களை எச்சரிக்கும் அபாய மணியாக இருக்கலாம். இந்த சூழலில் சரியான முறையில் கையாளுவது நல்லது. மேலும், நீர்சத்து நிரைந்தவற்றை எடுத்து கொண்டால் இதன் பாதிப்பு குறைவு.


வயிற்று உப்பசம்
எதை சாப்பிட்டாலும் வயிறு உப்பசமாக இருக்கிறதா? அதே போன்று மலச்சிக்கலும் உங்களை பாடாய்படுத்துகிறதா? இது கூட சிறுநீர்ப்பை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு இருக்கும் போது சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.


காய்ச்சல்

சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட தொற்றுகள் உங்களுக்கு காய்ச்சல் வடிவிலும் வெளிப்படும். இது சாதாரண காய்ச்சலாக இருக்காது. மாறாக உடலின் முழு தட்பவெப்பமும் குறைந்து குளிர்ந்த நிலையில் இருக்கும். இது போன்று இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள். 


சிறுநீர் நிறம்

உங்களுக்கு சிறுநீர் நுரை போன்று வந்தாலோ அல்லது சிறுநீரில் இரத்தம் வந்தாலோ அதை ஒரு போதும் சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இது மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி விடும். கூடவே உங்களுக்கு வேறு சில ஆபத்துகளையும் ஏற்படுத்தும்.


முதுகு வலி

பின்புற முதுகில் வலி இருந்தாலோ அல்லது வயிற்றில் வலி ஏற்பட்டாலோ அது கூட சிறுநீர் பாதையில் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம். மேலும், இது போன்ற வலிகளை எப்போதுமே சாதாரணமாக எடுத்து கொள்ளலாமல், உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.