புதியவை

Thursday, May 16, 2019

வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து இப்படி கூட செய்ய முடியுமாம்.


இந்த உலகில் பலவித பொருட்கள் உள்ளன. அவை அனைத்துமே பல விதங்களில் நமக்கு பயன்பட கூடும். சில பொருட்களை கொண்டு நமக்கு பிடித்தமானவற்றை செய்து கொள்ளலாம். சில பொருட்களை வைத்து வேறு வித உணவுகளை தயாரித்து கொள்ளலாம். குறிப்பாக நம் வீட்டில் இருக்கும் பல பொருட்கள் நம் உயிரையே காப்பாற்றும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எண்ணெய் முதல் சோடா உப்பு வரை இதன் பயன்கள் நீளுகிறது. இந்த பதிவில் வீடுகளில் உள்ள எந்தெந்த பொருட்களை வைத்து நம்மால் எப்படியெல்லாம் நமது வாழ்வை பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.


ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் 
ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு மட்டும் உதவுவதில்லை. மாறாக பல விதங்களிலும் நமது வாழ்வை காக்கிறது. குறிப்பாக கைகளில் இதனை தடவி மசாஜ் கொடுத்தால் உங்கள் வறட்சியான கைகள் மிகவும் மென்மையாக மாறி விடும். கூடவே கைகளில் உள்ள அழுக்குகளும் நீங்கும்.

காலி பாட்டில்

காலி பாட்டில் 
வீடுகளில் உள்ள காலியான கண்ணாடி பாட்டிலை வைத்து நம்மால் சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றை தயாரிக்க இயலும். இதற்காக பெரிய அளவில் நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டுயதில்லை.

டூத் பிரஸ்கள்

டூத் பிரஸ்கள் 
வீட்டில் உள்ள வீணாகி போன டூத் பிரஸ்களை கொண்டு மிக எளிதில் வீட்டில் உள்ள குழாய்கள், மேலும் அதை சார்ந்த இடத்தை சுத்தம் செய்யலாம். இது போன்ற டூத் பிரஸ்களை கொண்டு சீப்புகள் போன்றவற்றையும் சுத்தம் செய்யலாம்.

நெய்ல் பாலிஷ்

நெய்ல் பாலிஷ்
கலர் கலர் நெயில் பாலிஷ்களை வைத்து கைகளுக்கு மட்டும் வண்ணம் தீட்டுவதோடு, சாவிகளுக்கும் வண்ணம் தீட்டலாம். அதாவது, சாவிகள் எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தால் அதனை கண்டு பிடிப்பது கடினம். ஆனால், இந்த வகை கலர் கலர் நெயில் பாலிஷ்களை கொண்டு மிக எளிதில் இவற்றை வண்ணம் தீட்டி வகை படுத்தி விடலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா 
சமையல் பொருட்களில் பயன்படுத்தும் இந்த வகை பேக்கிங் சோடாவை நம்மால் பலவித ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் பயன்படுத்த இயலும். முக்கியமாக ஏதேனும் பூச்சி கடித்தாலோ, சூடு கட்டி வந்தாலோ அதனை சரி செய்ய பேக்கிங் சோடா உதவும்.

முட்டை ஓடு

முட்டை ஓடு 

வீடுகளில் முட்டை வாங்கினால் அதன் ஓட்டை அப்படியே தூக்கி போடுவது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக அந்த ஓட்டை சுத்தம் செய்து அதில் மண்ணை நிரப்பி ஏதேனும் செடிகளின் விதைகளை அதில் தூவினால் அந்த செடிகள் அழகாக வளரும்.