புதியவை

Wednesday, May 22, 2019

இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா?


வினை தீர்க்கும் விநாயகன் " என்று பிள்ளையாரை கூற காரணம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் கடவுளாக பிள்ளையார் இருப்பதுதான். இந்து மதத்தை பொறுத்தவரை மக்கள் அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது விநாயகர்தான். பிள்ளையாரை வழிபடுவதோ அவரின் ஆசீர்வாதத்தை பெறுவதோ மிகவும் எளிமையான ஒன்றாகும்.இந்து மதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும் சரி, சுபகாரியமாக இருந்தாலும் சரி விநாயகர் இல்லாமலோ அவரை வணங்காமலோ செய்ய முடியாது. தனது அருள் மூலம் நமக்கு தேவையானவற்றை செய்து தர இவர் எப்போதும் தயராய் இருப்பார். விநாயகரை வழிபடுவதற்கு அவருக்கு மிகவும் பிடித்தவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் விநாயகர் அதிகம் விரும்பும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.


பிள்ளையாரை ஈர்ப்பது எப்படி?

பிள்ளையாரை ஈர்ப்பது எப்படி?
பிள்ளையாரை ஈர்ப்பதற்கு பல வழிகள் இருக்கிறது அதில் மிகவும் எளிதான வழி என்னவென்றால் புதன் கிழமையில் கொழுக்கட்டைகளை வைத்து பிள்ளையாரை வழிபடுவதுதான். அனுமன் மற்றும் பைரவரை போல பிள்ளையாருக்கும் குங்குமம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தெரியுமா உங்களுக்கு?

ஏன் குங்குமம் வைத்து வழிபட வேண்டும்?

ஏன் குங்குமம் வைத்து வழிபட வேண்டும்?
புதன் கிழமையில் பிள்ளையாரை குங்குமம் வைத்து வழிபடுவது உங்களுக்கு அனைத்து துன்பங்களில் இருந்தும், வலிகளில் இருந்தும் விடுதலை அளிக்கும். 

குங்குமம் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

குங்குமம் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் 
காலையில் எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற ஆடையணிந்து பிள்ளையாருக்கு குங்குமம் வைத்து வழிபடுவது உங்களுடைய வேண்டுதல்களின் மீது நல்ல பலனை தரும்.

நெய் அல்லது மல்லிகை எண்ணெய்

நெய் அல்லது மல்லிகை எண்ணெய் 
குங்குமத்தை நெய் அல்லது மல்லிகை எண்ணெயில் கலந்து அதனை வெள்ளி அல்லது தங்க நாணயத்தில் வைத்து பிள்ளையாரின் மீது வைக்கவும். இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் தீர்க்காது உங்களின் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தையும் வழங்கும். பிள்ளையாரின் அருளை பெற உதவும் மற்ற பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

எருக்கை மலர்

எருக்கை மலர் 
எருக்கை மலர்களுக்கு உடல் மற்றும் மனதில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கும் சக்தி உள்ளது. பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து வழிபடுபவர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

சங்கு

சங்கு 
இந்து மதத்தின் ஒரு முக்கிய பகுதியாக சங்கு விளங்குகிறது. இதன் ஒலியானது கடவுளின் மீது உண்மையான பக்தியை எழுப்பக்கூடும். பிள்ளையாரும் தன் கையில் சங்கை வைத்திருப்பார். பிள்ளையார் பூஜையின் போது சங்கு ஒலிப்பது நல்லதாகும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் 
அந்ததந்த பருவகாலத்தில் கிடைக்கும் எந்த பழத்தை வேண்டுமென்றாலும் விநாயகருக்கு வைத்து வழிபடலாம் ஆனால் பிள்ளையாருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும், வாழை இலையும் மிகவும் பிடிக்கும்.

வெள்ளை மலர்கள்

வெள்ளை மலர்கள்
பிள்ளையாருக்கு வெள்ளை நிற மலர்களை வைத்து வழிபடுவது வெற்றியையும், புகழையும் சேர்க்கும். செம்பருத்தி பூவை வைத்து கூட பிள்ளையாரை வழிபடலாம். ஏனெனில் பிள்ளையாருக்கு இதுவும் மிகவும் பிடித்த மலராகும்.

அருகம்புல்

அருகம்புல் 

பிள்ளையாருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் குழந்தை வரத்தை வழங்கும். அருகம்புல் அல்லது மலர்கள் வைத்து வழிபடும்போது புஷ்பாஞ்சலி மந்திரத்தை கூறி வழிபட்டால் பிள்ளையார் உங்களின் அனைத்து கடந்த கால தவறுகளையும் மன்னித்து விடுவார்.