புதியவை

உதயசூரியன் பற்றி

கடந்த  பன்னிரெண்டு  வருடங்களாகஉதயசூரியன்”  என்ற  பெயரில்   ஒரு   கலை இலக்கிய  மாத  சஞ்சிகையை  வெளியிட்டு  வருகின்றோம்என்பதை  
அனைவரும்  அறிவீர்கள்.  

இந்த  நிலையில்    எமது  தாயக வறிய  மாணவர்களுக்கு  முடிந்தவரை உதவிகள்  செய்ய வேண்டுமென்ற  அவாவினால்  சிட்னி உதயசூரியன் தாயக மாணவர் உதவி  மையம்   என்ற அமைப்பினை எனது  மருமகன் திரு  ராஜன்  அவர்களது    முழு     உதவியோடு    ஆரம்பித்து திறம்பட பல  சேவைகளைச்  செய்து  வருகின்றோம்இதை  நாடே நன்கறியும்.  

மாணவர்களுக்கான  சேவைகள்  ஆரம்பிக்கப் பட்ட  பின்பு  செலவுகள் காரணமாக   எமது  மாத   இதழை  காலாண்டிதழாக  வெளியிட்டு      அதில் வெளிவரும்  விளம்பர  வருமானங்களோடும்    எமது  உறவுகளின்  சிறு சிறு   பங்களிப்புகளோடும்  கடந்த   12  மாதங்களில்  சுமார் 18  பாடசாலைகளில்  பயிலும்  வறிய  மாணவர்களுக்கு    பல் வகைப்பட்ட  உதவிகளை  வழங்கியுள்ளோம்  என்பதை  மன  மகிழ்வோடு  தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

வறிய மாணவர்களுக்கான  இப்புனித  சேவையைினை   மேலும் விரிவு படுத்தும்  நோக்கோடு   பல  இளம்  எழுத்தாளர்களையும் எம்மோடிணைத்து   அவர்களது   தரமான  சிறுகதைகள்கவிதைகளை புத்தமாக  வெளியிட்டு    அதில் கிடைக்கும்  சிறு  வருமானங்களையும் அவர்களது  முழு சம்மதத்தோடு  வறிய  மாணவர்களுக்கு   உதவும்  பணியை மேற்கொள்ள  நடபடிக்கை  எடுத்து     இயங்கி   வருகின்றோம்

இந்த முயற்சியினால்  இந்த  வருடக்கடைசிக்குள்  சுமார்  5  புதிய   இளம் 
எழுத்தாளர்களது  படைப்புகள்  புத்தகமாக  வெளிவரவுள்ளதென்பதையும்
மகிழ்வோடு  தெரிவிக்கின்றோம்

எமது  முயற்சிகளுக்கு  உதவும்  மனம் கொண்ட அனைத்து  உறவுகளும்
எம்மோடு சேர்ந்து  இயங்கலாம்  என்பதையும்  தெரிவித்துக் 
கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு…..

என்.ஜி.இரத்தினம்.

061-424681945
061-490721280
Email:   rsoa_sydney@hotmail.com.